.webp)
Colombo (News 1st)
குருணாகலில் புராதன கட்டடம் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் நகர மேயர் துஷார சஞ்சீவ வித்தாரனவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோரி, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் நாமல் கருணாரத்ன இன்று (28) மனு தாக்கல் செய்துள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த ரீட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் குருணாகல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இந்த உத்தரவை பிறப்பிக்குமாறு நாமல் கருணாரத்ன தாக்கல் செய்துள்ள ரீட் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புராதன முக்கியத்துவம் வாய்ந்த கட்டடமாக தொல்பொருள் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், குருணாகல் நகர மேயரால் இந்த கட்டடம் தகர்க்கப்பட்டமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காமை பாரிய குற்றம் எனவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.