வட கொரியாவில் முதலாவது கொரோனா நோயாளி?

வட கொரியாவில் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டாரா?

by Staff Writer 26-07-2020 | 11:41 AM
Colombo (News 1st) கேசோங் நகரை முடக்கி அவசர நிலை பிரகடனப்படுத்த வட கொரிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனா நோயாளர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் சட்டவிரோதமாக நாட்டிற்கு பிரவேசித்ததை அடுத்து கேசோங் நகரை முழுமையாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 3 வருடங்களுக்கு முன்னர் தென் கொரியாவிற்கு தப்பிச்சென்ற ஒருவர் கடந்த 19 ஆம் திகதி சட்டவிரோதமாக மீண்டும் நாடு திரும்பியுள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ளது. கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ள குறித்த நபருக்கு தொற்று உறுதிப்படுத்தப்படுமாயின் தமது நாட்டில் தொற்றுக்குள்ளானோர் உள்ளதாக வட கொரியா ஏற்றுக் கொள்ளும் முதலாவது சந்தர்ப்பமாக அது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.