நீர்கொழும்பு சிறைச்சாலை அத்தியட்சகர் உள்ளிட்ட நால்வரைக் கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் உத்தரவு

by Staff Writer 22-07-2020 | 4:18 PM
Colombo (News 1st) நீர்கொழும்பு சிறைச்சாலையில் அத்தியட்சகர் ஒருவர் உள்ளிட்ட நால்வரைக் கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா குற்றப்புலானாய்வுத் திணைக்களத்திற்கும் பதில் பொலிஸ் மா அதிபருக்கும் உத்தரவிட்டுள்ளார். சிறைச்சாலையின் அத்தியட்சகராகக் கடமையாற்றிய அநுருத்த சம்பாயோ, சி​ரேஷ்ட சிறைக்காவலர் உபாலி சரத் சந்திர, பதில் சிறைக்காவலர் நிஷாந்த சேனாரத்ன, இரண்டாம் நிலை சிறைக்காவலர் பிரசாத் களுவாராச்சி ஆகியோரையே கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்கள் குறித்து நீதிமன்றத்தில் விடயங்களை சமர்ப்பித்து, பிடியாணையைப் பெற்று கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதியொருவருக்கு குளிர்சாதனப்பெட்டி வழங்கியமை உள்ளிட்ட முறைகேடான நடவடிக்கைகள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட விசாரணை அறிக்கையை ஆராய்ந்த பின்னரே சட்ட மா அதிபர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.