ஆயுட்தண்டனை விதிக்கப்பட்டிருந்த யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் க.கண்ணதாசன் விடுதலை

by Staff Writer 22-07-2020 | 6:29 PM
Colombo (News 1st) LTTE அமைப்பிற்கு கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்திற்காக வவுனியா மேல் நீதிமன்றத்தினால் ஆயுட்தண்டனை விதிக்கப்பட்டிருந்த யாழ். பல்கலைக்கழக இசைத்துறை விரிவுரையாளர் க.கண்ணதாசன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இன்று விடுதலை செய்யப்பட்டார். க.கண்ணதாசன் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்ததுடன், அதற்கு பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளையின் பெற்றோர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், விடுதலைப்புலிகளுக்கு ஆட்சேர்க்கும் போது தங்களது பிள்ளையையும் சேர்த்தார் என குற்றம் சாட்டப்பட்டு, வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கில் அவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு 2017 ஆம் ஆண்டு அவருக்கு ஆயுட்தண்டனை வழங்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் க. கண்ணதாசனால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டின் அடிப்படையில் அவரை விடுதலை செய்தற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்மானித்தது. வழக்கு விசாரணையில் மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகியிருந்தார்.