by Staff Writer 21-07-2020 | 5:03 PM
Colombo (News 1st) சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படும் மிருக வேட்டை தொடர்பில் உடனடி விசாரணைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ வனஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அரிதான உயிரினங்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்பதால், அது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 20 ஆம் திகதி நல்லதண்ணி - மாபாகந்த பகுதியில் சிறுத்தையொன்று உயிரிழந்துள்ளது. இது குறித்து பிரதமர் கவனம் செலுத்தியுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைக் கருத்திற்கொண்டு வனஜீவராசிகள் அதிகாரிகளை அறிவுறுத்தி, இவ்வாறான செயற்பாடுகள் மீள நிகழாத வகையில் நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டாரவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.