by Staff Writer 19-07-2020 | 9:08 AM
Colombo (News 1st) மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் போதைப்பொருட்களுடன் 1,563 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 771 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல்வேறு மோசடிகளுடன் தொடர்புடைய 792 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் ஆலோசனையின் பேரில் நேற்று (18) காலை 6 மணி முதல் நேற்று மாலை 6 மணி வரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.