by Staff Writer 15-07-2020 | 4:52 PM
Colombo (News 1st) மலையகத்தில் சிறுத்தைகளைப் பாதுகாப்பது தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் விசேட வேலைத்திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விசேட வேலைத்திட்டத்தினூடாக மலையகப் பகுதிகளில் பொறிக்குள் சிக்கும் சிறுத்தைகளை பாதுகாக்க திட்டமிட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பொதுமக்களைத் தௌிவுபடுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ஏதேனுமொரு அனர்த்தத்தின் போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்புகொள்ள பொதுமக்களுக்காக அவசர அழைப்பு சேவையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மலையக பகுதிகளில் 06 சிறுத்தைகள் பொறிக்குள் சிக்கியுள்ளதுடன், அவற்றில் 03 சிறுத்தைகள் உயிரிழந்துள்ளன.