சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுமாறு வேண்டுகோள்

சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் வேண்டுகோள்

by Staff Writer 15-07-2020 | 8:29 AM
Colombo (News 1st) அடுத்த மாதம் 5ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு தாம் முடிந்தளவு முயற்சிப்பதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படுமாறு மக்களிடமும் அரசியல்வாதிகளிடமும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். நேற்று (14) யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்த அவர், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களுடன் யாழ். மாவட்ட செயலகத்திற்கு சென்று கலந்துரையாடலில் ஈடுபட்டபோதே இதனைத் தெரிவித்தார். தேர்தலில் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல் இதன்போது குறிப்பிட்டார்.