BCCI-க்கு தற்காலிகத் தலைமை செயல் அதிகாரி நியமனம்

BCCI-க்கு தற்காலிகத் தலைமை செயல் அதிகாரி நியமனம்

by Bella Dalima 14-07-2020 | 4:35 PM
Colombo (News 1st) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் (BCCI ) தற்காலிகத் தலைமை செயல் அதிகாரியாக ஹேமங் அமின் நியமிக்கப்பட்டுள்ளார். BCCI அமைப்பில் தலைமைச் செயல் அதிகாரியாகப் பணியாற்றிய ராகுல் ஜோரி, கடந்த டிசம்பர் மாதம் BCCI அமைப்பில் கங்குலி தலைமையிலான புதிய நிர்வாகம் பதவியில் அமர்ந்தவுடன், தனது பொறுப்பிலிருந்து விலக முடிவெடுத்தார். பிறகு முடிவை மாற்றிக்கொண்டார். 2021 வரை அவருக்கு ஒப்பந்தம் உள்ளதால், அதுவரை பதவியில் இருக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டதை ஏற்றுக்கொண்டார். இந்நிலையில், அவருடைய இராஜிநாமாக் கடிதத்தை BCCI ஏற்றுக்கொண்டது. இதனையடுத்து, ராகுல் ஜோரி தனது பதவியிலிருந்து விலகினார். BCCI-இன் தற்காலிகத் தலைமை செயல் அதிகாரியாக ஹேமங் அமின் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது IPL போட்டியின் தலைமை அதிகாரியாகவுள்ளார்.