by Staff Writer 14-07-2020 | 9:25 AM
Colombo (News 1st) தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீண்டும் பின்பற்றுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சுகாதார வழிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதா ஸ்தாபனத்தால் அறிவிக்கப்படும் வரை இந்த சுகாதார வழிமுறைகளை பின்பற்றுதல் அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கு முன்னர் பொதுமக்கள் வழங்கிய ஒத்துழைப்புகளை தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாக பிரதி பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.