by Chandrasekaram Chandravadani 06-07-2020 | 3:08 PM
Colombo (News 1st) உலகளாவிய ரீதியில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் நபர்களுக்கு எதிராக பிரித்தானியா தடைகளை அமுல்படுத்தவுள்ளது.
பிரித்தானியா சுயாதீனமாக தடைகளை அமுல்படுத்தும் முதலாவது சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.
பிரெக்ஸிட்டின் பின்னரான அரசாங்கத்தின் இந்தப் புதிய தடைகளை அந்நாட்டு வௌிவிவகார செயலாளர் டொமினிக் ராப் (Dominic Raab) அறிமுகப்படுத்தவுள்ளார்.
மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகப் பெயரிடப்படுபவர்களுடைய சொத்துகள் முடக்கப்படவுள்ளன.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடு என்ற அடிப்படையில் ஏனைய நாடுகளுடன் இணைந்தே பிரித்தானியா இதுவரை தடைகளை அமுல்படுத்தி வந்துள்ளது.
பிரெக்ஸிட்டின் பின்னர் முதல்தடவையாக அந்நாடு தனித்து தடைகளை விதிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.