by Staff Writer 20-06-2020 | 9:22 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - கொடிகாமம், மிருசுவில் A9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
இன்றிரவு 8 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பலத்த காயங்களுக்குள்ளான மற்றையவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.