பொருளாதார சவால்களிலிருந்து மீள ஒத்துழைப்போம்

பொருளாதார சவால்களிலிருந்து இலங்கை மீள்வதற்கு இந்தியா ஒத்துழைக்கும்: இந்திய உயர்ஸ்தானிகர்  

by Staff Writer 18-06-2020 | 7:59 PM
Colombo (News 1st) COVID-19 தொற்றினால் இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார சவால்களிலிருந்து மீள்வதற்கு, இந்தியா நெருங்கிய ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே கண்டியில் இன்று தெரிவித்தார்.
COVID தொற்றினால் உலகிலுள்ள அனைத்து நாடுகளும் பாரிய சவால்களை எதிர்நோக்கியுள்ளன. எனினும், நோய்த்தொற்று பரவுகின்றமையை இலங்கை சிறப்பாகக் கட்டுப்படுத்தியுள்ளது. இலங்கை தற்போது பொருளாதாரம் தொடர்பில் சிந்திக்க முடியும். இந்தியா அதற்காக அர்ப்பணிப்புச் செய்யும். இலங்கை ஜனாதிபதியுடன் எமது பிரதமர் அண்மையில் கலந்துரையாடியுள்ளார். பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு, இலங்கைக்கு இந்தியா பூரண ஒத்துழைப்பை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளது. சவால்களை எதிர்கொள்வதற்கு இலங்கையின் அயல்நாடு என்ற ரீதியிலும் பங்குதாரர் என்ற ரீதியிலும் அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க எதிர்பார்த்துள்ளோம்.
என கோபால் பாக்லே குறிப்பிட்டார். ஶ்ரீ தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட இந்திய உயர்ஸ்தானிகர், அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரரை சந்தித்தார்.