by Staff Writer 18-06-2020 | 9:23 PM
Colombo (News 1st) திருகோணமலையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடும் கூட்டம் இன்று நடைபெற்றது.
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டம் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் D.G.B. குமாரசிறி தலைமையில் நடைபெற்றது.
இதில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித்த வணிகசிங்க, திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தானி எம். ஏ. அன்னஸ், திருகோணமலை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் N.பிரதீபன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
திருகோணமலை மாவட்டத்தில் கண்ணிவெடிகள் இருப்பதாக அடையாளம் காணப்பட்ட பகுதிகள் தொடர்பாகவும், இதுவரை அகற்றப்படாத கண்ணிவெடிகளை அகற்றம் பொறிமுறைகளும், அதற்கான தொழில்நுட்பங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டது.
கண்ணிவெடிகள் அதிகம் இருப்பதாக அடையாளம் காணப்பட்ட பகுதிகள் அரச திணைக்களங்களுக்கு உட்பட்டதாக இருப்பதால், அங்கு அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள உரிய அனுமதியைப் பெற்று செயற்படவுள்ளதாக திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.