யாழில் விபத்தில் தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழப்பு

யாழில் தீயணைப்பு வாகனம் விபத்திற்குள்ளானதில் தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழப்பு

by Bella Dalima 16-06-2020 | 3:52 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - நீர்வேலி பகுதியில் தீயணைப்பு வாகனம் விபத்திற்குள்ளானதில் தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது, தீயணைப்பு வீரர்கள் இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், திருநகர் பகுதியை சேர்ந்த 34 வயதான தீயணைப்பு வீரர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக யாழ். மாநகர பதில் முதல்வர் துரைராஜா ஈசன் தெரிவித்தார். காயமடைந்த இருவரும் மன்னார் மற்றும் பருத்தித்துறை பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். பருத்தித்துறை, மணற்காடு சவுக்குமரக்காட்டில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்காக சென்ற தீயணைப்பு வாகனமே இன்று பகல் 2.05 அளவில் விபத்திற்குள்ளாகியுள்ளது. விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. கோப்பாய் பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.