தனியார் பஸ்களில் சோதனை

தனியார் பஸ்களை சோதனைக்குட்படுத்தும் நடவடிக்கை ஆரம்பம்

by Staff Writer 13-06-2020 | 6:07 PM
Colombo (News 1st) கொழும்பு மத்திய பஸ் நிலையத்தை மையமாகக் கொண்டு தனியார் பஸ்களை சோதனைக்குட்படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், தேசபந்து தென்னகோனின் ஆலோசனையின் பேரில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கொழும்பு மத்திய பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் தனியார் பஸ்கள் சென்றடைய வேண்டிய இடத்தை உரிய நேரத்தில் சென்றடைகின்றனவா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (12) ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கையின் கீழ் 267 பஸ்கள் சென்றடையும் நேரம் மதிப்பிடப்பட்டுள்ளதுடன், அவற்றில் 119 பஸ்கள் தாமதமாகவே சென்றடைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 55 பஸ்கள் உரிய நேரத்திற்கு முன்னரே சென்றடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இதற்கமைய, அதிக வேகத்தில் பயணிக்கும் பஸ்கள் மற்றும் வாகன நெரிசலை ஏற்படுத்தி தாமதமாக பயணிக்கும் பஸ்களின் சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.