by Staff Writer 10-06-2020 | 6:56 PM
Colombo (News 1st) கொழும்பு- மருதானை, விபுலசேன மாவத்தையில் உள்ள கட்டடம் ஒன்றில் தீ பரவியுள்ளது.
தீயை கட்டுப்படுத்த 08 வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு அறிவித்துள்ளது.
நான்கு மாடிகளைக் கொண்ட கட்டடம் ஒன்றிலேயே தீ பரவியுள்ளது.
மின்சார ஒழுக்கினால் தீ பரவியிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.