பள்ளிவாசல்களை மீள திறப்பது தொடர்பில் கலந்துரையாடல்

பள்ளிவாசல்களை மீள திறப்பது தொடர்பில் கலந்துரையாடல்

by Staff Writer 27-05-2020 | 7:20 PM
Colombo (News 1st) மக்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில், பள்ளிவாசல்களை மீள திறப்பது தொடர்பில் கலந்துரையாடப்படுவதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்தது. பள்ளிவாசல்களை மீளத் திறப்பது தொடர்பில் சுகாதார அமைச்சுடனும், COVID-19 தொடர்பான செயலணியுடனும் வக்பு சபை கலந்துரையாடி வருவதாக வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் தெரிவித்தார். வக்பு சபையின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வரும் வரை இந்த விடயத்தில் பொறுமை காக்குமாறு அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.