by Staff Writer 11-05-2020 | 7:30 PM
Colombo (News 1st) இராணுவத்தின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க சுகாதார அமைச்சின் செயலாளராக கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இன்று மாலை அவர் சுகாதார அமைச்சில் கடமைகளை ஆரம்பித்தார்.
மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க கதிரியக்கவியல் தொடர்பிலான விசேட வைத்தியர் ஆவார்.
இதேவேளை, 7 அமைச்சுக்களின் புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பின்வருமாறு ;
01. மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க - சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சு
02. மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) A.K.S.பெரேரா - மஹவெலி, விவசாயம், நீர்ப்பாசனம்
03. J.J.ரத்னசிறி - அரச நிர்வாகம், உள்விவகாரம்
04. S.ஹெட்டியாரச்சி - சுற்றுலா மற்றும் விமான சேவைகள்
05. நீல் பண்டார ஹபுஹின்ன - மகளிர் மற்றும் சிறுவர் விவகாரம்
06. சந்திராணி ஜயவர்தன - உள்ளக வர்த்தகம், உணவு பாதுகாப்பு
07. S.M. மொஹமட் - நீதி, மனித உரிமைகள்