கொழும்பு பங்குப் பரிவர்த்தனை இன்றும் நிறுத்தம்

கொழும்பு பங்குப் பரிவர்த்தனை நடவடிக்கை இன்றும் நிறுத்தம்

by Staff Writer 11-05-2020 | 3:26 PM
Colombo (News 1st) கொழும்பு பங்குச் சந்தையின் பரிவர்த்தனை நடவடிக்கைகள் இன்று (11) ஆரம்பிக்கப்பட்டு சிறிது நேரத்தின் பின்னர் நிறுத்தப்பட்டது. கொழும்பு பங்குச் சந்தையின் S&P SL 20 சுட்டெண் 11.9 வீதத்தினால் வீழ்ச்சியடைந்தமையினால் இன்றைய பரிவர்த்தனை நடவடிக்கைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டன. கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதியின் பின்னர் முதற்தடவையாக கொழும்பு பங்குச் சந்தையின் பரிவர்த்தனை நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. இன்று மொத்த பங்கு விலைச்சுட்டெண் 4.1 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றைய மொத்த பங்கு விலைச்சுட்டெண் 4384.1 ஆகவும் நாளாந்த புரள்வு 24.8 மில்லியனாகவும் பதிவாகியுள்ளது.