by Chandrasekaram Chandravadani 11-05-2020 | 10:07 AM
Colombo (News 1st) இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (87 வயது), காய்ச்சல் மற்றும் நெஞ்சுவலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து, அவரது உடல்நிலை தற்போது தேறிவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே, 2010 ஆம் ஆண்டில் இதே வைத்தியசாலையில் அவர் இருதய அறுவை சிகிச்சை செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், விரைவில் குணமடைய வேண்டுமென அரசியல் பலரும் தமது பிரார்த்தனைகளை வௌியிட்டுள்ளனர்.
2004 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆண்டு வரை இந்தியப் பிரதமராக இருந்த மன்மோகன் சிங், தற்போது மாநிலங்களவை உறுப்பினராக செயற்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.