by Staff Writer 10-05-2020 | 6:56 PM
Colombo (News 1st) தாயகம் திரும்பமுடியாமல் மலேஷியாவில் சிக்கியிருந்த 178 இலங்கை பிரஜைகள் இன்று (10) மாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.
ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம், கோலாலம்பூரிலிருந்து விமான நிலையத்தை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமைநேர முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த 272 மாணவர்களை ஏற்றிய விமானம் மெல்பர்னிலிருந்து இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளது.
UL605 ரக விமானம் இன்று காலை 6.12 மணிக்கு விமான நிலையத்தை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலைய கடமை நேர முகாமையாளர் தெரிவித்துள்ளார்.