by Staff Writer 29-04-2020 | 5:50 PM
Colombo (News 1st) தபால் நிலையங்கள் எதிர்வரும் மே 4 ஆம் திகதி முதல் சாதாரண அலுவலக சேவைகளுக்காக திறக்கப்படவுள்ளன.
கொடுப்பனவுகள் மற்றும் ஊதியம் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அறிவித்துள்ளார்.
இதற்கிணங்க, முதியோர்களுக்கான கொடுப்பனவு விவசாயிகளுக்கான கொடுப்பனவு உள்ளிட்ட ஓய்வூதிய கொடுப்பனவு தபால் அலுவலகங்களினூடாக பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன.