ஒரு தொகை போதைப்பொருட்கள் கொண்டுவரப்பட்டன

327 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டது

by Staff Writer 15-04-2020 | 3:33 PM
Colombo (News 1st) சர்வதேச கடற்பரப்பில் கடந்த 10ஆம் திகதி கைப்பற்றப்பட்ட போதைப்பொருள், திக்கோவிட்ட துறைமுகத்திற்கு இன்று (15) கொண்டுவரப்பட்டுள்ளது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வாவின் கண்காணிப்பின் கீழ் இந்த போதைப்பொருள் திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதில் 281 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 46 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் அடங்குவதாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா தெரிவித்துள்ளார். இவற்றின் பெறுமதி 327 கோடி ரூபாவுக்கும் அதிக தொகையாகும்.