by Staff Writer 13-04-2020 | 5:12 PM
Colombo (News 1st) ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை கைது செய்ய இன்று (13) மாலை 6 மணி முதல் நாளை (14) மாலை 6 மணி வரை நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
புத்தாண்டு காலப்பகுதியான இந்த காலப்பகுதியில் மக்களை பாதுகாப்பதற்காக 45,000 இற்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
வேறு நாட்களை போன்று வீதியில் நடமாடவோ அல்லது அனாவசியமான முறையில் சுற்றித்திரியவோ வேண்டாமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.