by Staff Writer 03-04-2020 | 6:09 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்று குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்பியமையுடன் தொடர்புடைய 61 சம்பவங்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் வதந்திகளை பரப்பிய பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டு நேற்று விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
எதிர்வரும் 9 ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் திணைக்களத்தின் கணினி குற்றத்தடுப்புப் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.