ஊரடங்கு சட்டத்தை மீறுவோருக்கு எதிராக வழக்கு

ஊரடங்கு சட்டத்தை மீறுவோருக்கு எதிராக வழக்கு

by Staff Writer 31-03-2020 | 7:05 PM
Colombo (News 1st) ஊரடங்கு அனுமதிப்பத்திரமின்றி வீதிகளில் நடமாடுவோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனிமைப்படுத்தல் விதிமுறைகள் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என பொலிஸார் கூறியுள்ளனர். அவர்கள் தேவைக்கேற்ப பொது சுகாதார பரிசோதகர் அல்லது சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டு அறிக்கை பெற்றுக்கொள்ளப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்படும் வாகனங்கள் தொற்றுநிலைமை வழமைக்கு திரும்பும் வரை தடுத்துவைக்கப்பட்டிருக்கும் என பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.