பொதுத் தேர்தலை பிற்போடுமாறு TNA கோரிக்கை

பொதுத் தேர்தலை பிற்போடுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை

by Staff Writer 16-03-2020 | 3:56 PM
Colombo (News 1st) பொதுத் தேர்தலை பிற்போடுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. பங்காளி கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடி இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் M.A. சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செயற்பாடுகளுக்கு கூட்டமைப்பு பூரண பங்களிப்பை வழங்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்புக்கு அதியுச்ச கரிசனை வழங்க வேண்டும் என்பதால் தேர்தலை பிற்போடுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அசாதாரண சூழ்நிலையில் ஜனநாயக நடவடிக்கைகளை முழுமையாக முன்னெடுக்க முடியாது என்பதால் பொதுத் தேர்தலை பிற்போடுமாறு தேசிய கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.