by Staff Writer 29-02-2020 | 9:54 PM
Colombo (News 1st) நாட்டில் பல்வேறு பிரச்சினைகளும் சவால்களும் காணப்படுகின்றன. எனினும், எம்மால் செய்யக்கூடிய விடயங்களும் உள்ளன.
இயற்கை எழில் கொஞ்சும் ஃபொக்ஸ் ஹில் சூழல் கிடைத்தற்கரிய சந்தர்ப்பமொன்றை இன்று வழங்கியது.
இயற்கை வனப்பு நிறை தியத்தலாவை ஃபொக்ஸ் ஹில், சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த இலங்கைக்கே உரித்தான அரிதான தாவரங்களையும் தன்னகத்தே கொண்டு மிளிர்கின்றது.
நாட்டின் தேவையை உணர்ந்து பயணிக்கும் தேசத்தின் தன்னார்வத் தொண்டர்களான V-Force குழாத்தினர் ஃபொக்ஸ் ஹில் மலைத்தொடரில் 2000 மரக்கன்றுகளை நட்டனர்.
V-Force குழாத்தின் இன்றைய செயற்திட்டத்தில் இராணுவ அதிகாரிகளும் MAS குழாத்தினரும் இணைந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் பண்டாரவளை மகளிர் வித்தியாலய மாணவிகளும் இணைந்து கொண்டனர்