ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு விண்ணப்பம்

ஒரு இலட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு 3 இலட்சம் விண்ணப்பங்கள்

by Staff Writer 23-02-2020 | 9:14 AM
Colombo (News 1st) குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான ஒரு இலட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு இதுவரை 3 இலட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்த பணியகங்களில் அவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சி கூறியுள்ளார். எதிர்வரும் 26, 27, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் நேர்முகப் பரீட்சைகள் நடைபெறவுள்ளன. இது குறித்து கலந்தாலோசிப்பதற்கு நாளைய தினம் அனைத்து மாவட்ட செயலாளர்களும் ஜனாதிபதி செயலகங்களுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.