சாய்ந்தமருது நகர சபைக்கான அதிவிசேட வர்த்தமானி வௌியீடு

by Staff Writer 15-02-2020 | 3:58 PM
Colombo (News 1st) கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது அதிகார எல்லைக்கு புதிய நகர சபையை ஸ்தாபிப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் கையொப்பத்துடன் இந்த அதிவிசேட வர்த்தமானி நேற்று (14) நள்ளிரவு வௌியிடப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதி சாய்ந்தமருது நகர சபைக்கான உத்தியோகபூர்வ பதவிக்காலம் ஆரம்பமாகின்றது. கல்முனை மாநகர சபை 2022 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதியுடன் கலைக்கப்பட்டதன் பின்னர் சாய்ந்தமருது நகர சபைக்கான உத்தியோகபூர்வ பதவிக்காலம் ஆரம்பமாகவுள்ளது. 17 கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கி சாய்ந்தமருது நகர சபைக்கான அதிகார எல்லை வரையறுக்கப்பட்டுள்ளது.