உதயங்க வீரதுங்க வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி

by Staff Writer 15-02-2020 | 3:36 PM
Colombo (News 1st)  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் சுகயீனமுற்றுள்ளமையால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. புதிய மெகசின் சிறைச்சாலையில் உதயங்க வீரதுங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். மெகசின் சிறைச்சாலையில் தேவையான மருத்துவ வசதிகள் இன்மையால் உதயங்க வீரதுங்க வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவிற்கு அமைய, கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று அதிகாலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டார்.

ஏனைய செய்திகள்