சீனாவில் தொடர்ந்தும் 204 இலங்கை மாணவர்கள்...

சீனாவில் தொடர்ந்தும் 204 இலங்கை மாணவர்கள்...

by Staff Writer 02-02-2020 | 8:51 AM
Colombo (News 1st) சீனாவிலிருந்து தாயகம் திரும்பும் எதிர்பார்ப்புடன் உள்ள மேலும் 204 இலங்கை மாணவர்களுடன் தொடர்பினை ஏற்படுத்தியுள்ளதாக ​வௌிநாட்டு உறவுகள் அமைச்சு தெரிவித்துள்ளது. சீனாவிலுள்ள குறித்த மாணவர்களை நாட்டிற்கு அழைத்துவருவதற்காக பீஜிங்கிலுள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் இலங்கை கொன்சியூலர் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விசேட விமானத்தில், சீனாவின் வுஹான் நகரிலிருந்து அழைத்து வரப்பட்ட 33 மாணவர்கள் தியத்தலாவை இராணுவ ஆதார வைத்தியசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எதிர்வரும் 2 வாரங்களுக்கு இராணுவ ஆரம்ப வைத்தியசாலையின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு கட்டடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றியமைக்கான அறிகுறிகள் 14 நாட்களின் பின்னரே வௌிப்படும் என்பது வைத்தியர்களின் கருத்தாகும். இதனால் சீனாவின் வுஹானிலிருந்து வருகைதந்த மாணவர்களை 14 நாட்களுக்கு வைத்தியர்களின் கண்காணிப்பின் கீழ் தங்க வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.