இறுவெட்டுக்களை ரஞ்சன் ராமநாயக்க கையளிக்கவில்லை 

குரல் பதிவுகள் அடங்கிய இறுவெட்டுக்களை ரஞ்சன் ராமநாயக்க கையளிக்கவில்லை: சபாநாயகர் அறிவிப்பு

by Staff Writer 24-01-2020 | 3:58 PM
Colombo (News 1st) குரல் பதிவுகள் அடங்கிய இறுவெட்டுக்களை ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்றத்திடம் கையளிக்கவில்லை என சபாநாயகர் கரு ஜயசூரிய சபையில் அறிவித்துள்ளார். இன்றைய சபை அமர்வின் போதே சபாநாயகர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். செயலாளர் நாயகத்திடம் அதனை வழங்குவதாகக் கூறிய போதும் ரஞ்சன் ராமநாயக்க வழங்கவில்லை என சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பு ஒன்றுடன் அதிகாரி ஒருவரிடம் வழங்கியுள்ளார். பின்னர் அந்த அதிகாரியிடமிருந்து அதனை மீளப்பெற்றுள்ளார். இதன் காரணமாக அது குறித்து பாராளுமன்றத்திற்கு எவ்வித பொறுப்புகளும் இல்லை என சபாநாயகர் மேலும் கூறியுள்ளார்.