மருத்துவ சான்றிதழை பெற இணையத்தளத்தில் முற்பதிவு

மருத்துவ சான்றிதழை பெற போக்குவரத்து மருத்துவ நிறுவன இணையத்தளத்தில் முற்பதிவு

by Staff Writer 22-01-2020 | 1:28 PM
Colombo (News 1st) தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தினூடாக மருத்துவ அறிக்கையைப் பெறுவதற்கு ஒன்லைன் ஊடாக முற்பதிவு செய்வதற்கான புதிய செயற்றிட்டம் இன்று (22) முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் இதற்கான நிகழ்வு இடம்பெற்றது. புதிய திட்டத்தினூடாக போக்குவரத்து மருத்துவ நிறுவனத்திற்கு செல்லாது, மருத்துவ அறிக்கையை பெறுவதற்கான தினத்தை ஒன்லைன் ஊடாக முற்பதிவு செய்து கொள்ள முடியும். தாம் பதிவுசெய்யும் நேரத்திற்கு வருகைதந்து மருத்துவ பரிசோதனைகளை பெற்றுக் கொள்வதற்கு புதிய திட்டத்தினூடாக பயனாளிகளுக்கு முடியும் என போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைமை வைத்தியர் K.S.M. சமரசேகர குறிப்பிட்டுள்ளார். இதனூடாக தேவையற்ற கால வீணடிப்பு இல்லாது செய்யப்படும் என அவர் கூறியுள்ளார். www.ntmi.lk என்ற இணையத்தள முகவரிக்குள் பிரவேசித்து முற்பதிவுகளை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணையளத்தளத்தினூடாக எதிர்வரும் 27 ஆம் திகதி தொடக்கம் முற்பதிவுகள் ஏற்றுக் கொள்ளப்படும் என போக்குவரத்து மருத்துவ நிறுவனம் அறிவித்துள்ளது.