கிழக்கிலிருந்து தெற்காசிய மட்டத்திற்கு உயர்ந்த கராத்தே வீரர் செந்தூரராஜா பாலுராஜ்

by Staff Writer 18-01-2020 | 8:27 PM
Colombo (News 1st)  கராத்தே விளையாட்டில் சர்வதேசத்தை வெற்றிகொள்ளும் எதிர்பார்ப்பில் காத்திருக்கும் வீரர் தான் செந்தூரராஜா பாலுராஜ். இவர் கிழக்கு மாகாணத்திலிருந்து தெற்காசிய மட்டத்திற்கு உயர்ந்த கராத்தே வீரராவார். கல்முனை - சேனைக்குடியிருப்பை சேர்ந்த பாலுராஜ் நேபாளத்தில் நடைபெற்ற 13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் கராத்தே போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார். கட்டா பிரிவில் அவர் இந்த வெற்றியைப் பெற்றார். சிறுவயது முதலே கராத்தே விளையாட்டின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக பாலுராஜ் ஆரம்ப காலத்தில் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளார். பொருளாதாரத் தடை இவருக்கு பெரும் நெருக்கடியாக இருந்துள்ளது. சகலதையும் வெற்றிகொண்டு வாழ்வில் முன்னேறும் இலட்சியத்துடன் இவர் பயணிக்கிறார்.