அஜித் தோவால் - ஜனாதிபதி சந்திப்பு

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஜனாதிபதியுடன் சந்திப்பு

by Staff Writer 18-01-2020 | 6:41 PM
Colombo (News 1st) இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் இன்று முற்பகல் நாட்டிற்கு வருகை தந்தார். நாட்டின் உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து அவர் கலந்துரையாடவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்போது, முக்கியமான பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ளது. கலந்துரையாடல்களின் பின்னர் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் இன்று மீண்டும் இந்தியா நோக்கி புறப்படவுள்ளார்.