by Staff Writer 15-01-2020 | 8:36 PM
Colombo (News 1st) - அரச புலனாய்வுப் பிரிவிற்கு புதிய சட்டமொன்றை தயாரிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய (15) ஊடக சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
இந்த ஊடக சந்திப்பு அமைச்சரவை இணை பேச்சாளர்களான பந்துல குணவர்தன மற்றும் ரமேஷ் பத்திரண ஆகிய அமைச்சர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
அரச புலனாய்வுப் பிரிவிற்காக புதிய சட்டமொன்றை கொண்டு வருவதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது.
இதேவேளை, பல்வேறு விசாரணைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான பூரண அதிகாரத்தைக் கொண்ட ஆணைக்குழுவிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.