by Staff Writer 14-01-2020 | 7:31 PM
Colombo ( News 1st) - சிம்பாப்வேயில் நடைபெறவிருக்கும் டெஸ்ட் தொடருக்கான 15 வீரர்களைக் கொண்ட தேசிய குழாமை இலங்கை கிரிக்கெட் அணி அறிவித்துள்ளது.
அணியின் தலைவராக திமுத் கருணாரத்ன செயற்படவுள்ளார்.
இவர்கள் எதிர்வரும் 16 ஆம் திகதி இலங்கையில் இருந்து சிம்பாப்வேக்கு புறப்படவுள்ளனர்.
அங்கு அவர்கள் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட தீர்மானித்துள்ளனர்.
கடந்த பாகிஸ்தான் டெஸ்ட் விஜயத்தில் இடம்பெற்ற குசல் ஜனித் பெரேராவிற்கு இம்முறை குழாத்தில் வாய்ப்பளிக்கப்படவில்லை.
எவ்வாறாயினும், சுகயீனம் காரணமாக வாய்ப்பை இழந்த வேகப்பந்து வீச்சாளரான சுரங்க லக்மாலுக்கு இம்முறை இடம் கிடைத்துள்ளது.
முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 19 ஆம் திகதி ஹராரேயில் ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை குழாம்:
1) திமுத் கருணாரத்ன - தலைவர்
2) குசல் மென்டிஸ்
3) அஞ்சலோ மெத்தியூஸ்
4) தினேஸ் சந்திமால்
5) லகிரு திரிமான்ன
6) தனஞ்சய டி சில்வா
7) நிரோசன் திக்வெல்ல
8) தில்ருவன் பெரேரா
9) லசித் அம்புல்தெனிய
10) லகிரு குமார
11) விஷ்வ பெர்னாண்டோ
12) கசுன் ராஜித
13) லக்ஷன் சந்தகன்
14) சுரங்க லக்மால்
15) ஓஷத பெர்னாண்டோ