by Staff Writer 11-01-2020 | 8:55 PM
Colombo (News 1st) My Dad My Superstar கிரிக்கெட் தொடரில் இம்முறை வட மாகாண அணி ஒன்றையும் இணைத்துக்கொள்ள எதிர்பார்ப்பதாக முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க குறிப்பிட்டார்.
My Dad My Superstar கிரிக்கெட் சுற்றுப் போட்டி தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பு SSC மைதானத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.
இலங்கைக்கு உலக சாம்பியன் பட்டத்தை ஈட்டிக்கொடுத்த முன்னாள் அணித்தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
இலங்கை கிரிக்கெட்டின் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட வீரர்களின் பங்களிப்புடன் My Dad My Superstar கிரிக்கெட் தொடர் கடந்த வருடம் நடத்தப்பட்டது.