வத்தளை உள்ளிட்ட பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை

வத்தளை உள்ளிட்ட பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடை

by Staff Writer 09-01-2020 | 6:47 PM
Colombo (News 1st) பிரதான நீர்க்குழாய் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கசிவு காரணமாக வத்தளை உள்ளிட்ட பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. பேலியகொட, வத்தளை, மாபொல நகர சபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் களனி, வத்தளை ஆகிய பிரதேச சபைகளுக்குட்பட்ட பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. களனி - கோணவல பகுதியில் பிரதான நீர்க்குழாய் கட்டமைப்பில் கசிவு ஏற்பட்டுள்ளது. அதனை சீர்செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.