by Staff Writer 08-01-2020 | 5:41 PM
Colombo (News 1st) கட்டாய விடுமுறை வழங்கப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை எதிர்வரும் மார்ச் மாதம் 18 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டில் பொலிஸ் தலைமையகத்தில் மின்தூக்கி இயக்குனரை மிரட்டிய குற்றச்சாட்டு தொடர்பில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று மன்றில் அறிவித்தது.
சம்பவம் தொடர்பில், பூஜித் ஜயசுந்தர குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.