ரஞ்சன் ராமநாயக்க மன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்

ரஞ்சன் ராமநாயக்க இன்று மன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்

by Staff Writer 05-01-2020 | 7:14 AM
Colombo (News 1st) கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று (05) நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். ரஞ்சன் ராமநாயக்க, மாதிவெலவிலுள்ள அவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து நேற்றிரவு கைது செய்யப்பட்டார். நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் பெறப்பட்ட சோதனை உத்தரவிற்கமைய பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வீடு நேற்று மாலை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. கொழும்பு தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, அனுமதிப்பத்திரம் இன்றி துப்பாக்கி மற்றும் அதற்காகப் பயன்படுத்தப்படும் 9 MM ரக 127 ரவைகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான சில ஆவணங்கள் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.