ஈராக்கிலுள்ள அமெரிக்கர்களுக்கான அறிவிப்பு

அமெரிக்கர்களை ஈராக்கிலிருந்து வௌியேறுமாறு அறிவிப்பு

by Bella Dalima 03-01-2020 | 4:42 PM
Colombo (News 1st) ஈராக்கிலிருந்து உடனடியாக வௌியேறுமாறு தமது நாட்டு பிரஜைகளுக்கு அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் ஈராக்கின் பக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஈரானின் புரட்சிகர காவல் படைப்பிரிவின் தலைவரான ஜெனரல் காசிம் சொலைமணி மற்றும் ஈராக் இராணுவத் தளபதி அபு மகாதி உள்ளிட்ட 8 பேர் கொல்லப்பட்டனர். எவ்வாறாயினும், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை "மிகவும் அபாயகரமான மற்றும் முட்டாள்தனமானது'' என ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவட் சரிஃப் கூறியுள்ளார்.