தப்பிச்சென்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவர் கைது

தப்பிச்சென்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவர் கைது

by Staff Writer 28-12-2019 | 4:58 PM
Colombo (News 1st) கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் தப்பிச்சென்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவர் கட்டுகஸ்தொட்ட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். போக்குவரத்து வழக்கொன்றின் கீழ் கல்கமுவ நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கிணங்க குறித்த நபர் கட்டுகஸ்தொட்ட பொலிஸார் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பில் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். கடந்த 22 ஆம் திகதி அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது தப்பிச்சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு கைது செய்யப்பட்ட பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குறித்த சந்தேகநபர், கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.