by Staff Writer 26-12-2019 | 10:26 PM
Colombo (News 1st) மோட்டார்வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் வேரஹெர கிளைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று திடீரென விஜயம் செய்திருந்தார்.
முன் அறிவித்தலின்றி மோட்டார்வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் வேரஹெர கிளைக்கு ஜனாதிபதி சென்றிருந்த சந்தர்ப்பத்தில், சேவையை பெற்றுக்கொள்வதற்காக பெருந்திரளான மக்கள் அங்கு வருகை தந்திருந்தனர்.
சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பதாரர்களுக்கு தாமதமின்றி அனுமதிப்பத்திரத்தை விநியோகிப்பதற்கு உரிய முறையொன்றை தயாரிக்குமாறும் அது தொடர்பான அறிக்கையை ஒரு மாதத்திற்குள் வழங்குமாறும் ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.