by Staff Writer 26-12-2019 | 10:10 PM
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, ராஜித சேனாரத்னவின் கொழும்பிலுள்ள வீட்டில் சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து சோதனை மேற்கொண்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவைக் கைது செய்யுமாறு கடந்த 24 ஆம் திகதி நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு அமைய இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கொழும்பு மற்றும் பேருவளையிலுள்ள ராஜித சேனரத்னவின் வீடுகள் நேற்றும் சோதளைக்கு உட்படுத்தப்பட்டன.
இதேவேளை, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரம் இன்று பகல் மீளப்பெறப்பட்டுள்ளது.
ராஜித சேனாரத்னவின் சட்டத்தரணிகளால் இன்று பகல் நகர்த்தல் பத்திரம் மீளப்பெறப்பட்டுள்ளது.
தம்மைக் கைது செய்வதற்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீள விசாரணைக்கு எடுக்குமாறு கோரியே ராஜித சேனாரத்னவினால் இந்த நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
வெள்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் டொக்டர் ராஜித சேனாரத்னவை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தினூடாக கடந்த 24 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்ட வௌ்ளை வேன் சாரதிகள என கூறப்படும் இருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் நாளை மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.