முன்னாள் பா.உ., ஜஸ்டின் கலப்பத்தி காலமானார்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜஸ்டின் கலப்பத்தி காலமானார்

by Staff Writer 24-12-2019 | 4:13 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜஸ்டின் கலப்பத்தி காலமானார். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் இன்று (24) தனது 68ஆவது வயதில் காலமாகியுள்ளார். ஜஸ்டின் கலப்பத்தி, 1988 ஆம் ஆண்டு தொடக்கம் தென் மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அரசியலில் ஈடுபட்ட ஒருவராவார். காலஞ்சென்ற ஜஸ்டின் கலப்பத்தியின் பூதவுடல் இன்றிரவு மாத்தறையிலுள்ள அன்னாரின் இல்லத்திற்குக் கொண்டுசெல்லப்படவுள்ளது.