மரக்கறி விலைகள் ஜனவரியில் குறைவடையக்கூடும்

மரக்கறி வகைகளின் விலைகள் ஜனவரியில் குறைவடையும் என எதிர்பார்ப்பு

by Staff Writer 18-12-2019 | 4:09 PM
Colombo (News 1st)  மரக்கறி வகைகளின் விலைகள் அதிகரிப்பு எதிர்வரும் ஜனவரி மாதத்தின் நடுப்பகுதி அளவில் குறைவடையக்கூடும் என்று ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய அலுவல்கள் ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. வருட இறுதியில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பது சாதாரணமான விடயம் என நிறுவனத்தின் பணிப்பாளர் தமிந்த பிரியதர்ஸன தெரிவித்தார். கடந்த வருட விலையுடன் ஒப்பிடுகையில் அரியின் விலை குறிப்பிடத்தக்க அளவு குறைவடைந்துள்ளதாக அவர் கூறினார். கடந்த வருடத்தில் இக்காலப்பகுதியில் ஒரு கிலோ அரிசி 115 ரூபாவிற்கும் 120 ரூபாவிற்கும் இடையில் விற்பனை செய்யப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.