கடற்றொழில்சார் அபிவிருத்திக்கு உதவுமாறு வேண்டுகோள்

கடற்றொழில்சார் அபிவிருத்திக்கு உதவுமாறு நோர்வேயிடம் வேண்டுகோள்

by Staff Writer 15-12-2019 | 1:48 PM
Colombo (News 1st) வடக்கு, கிழக்கு கடற்றொழில்சார் அபிவிருத்திக்கு உதவுமாறு நோர்வேயிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக துறைசார் அமைச்சு தெரிவித்துள்ளது. மீன்பிடித் துறையை விருத்திசெய்வதற்கான அதிகளவான முதலீடுகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் எதிர்பார்ப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நோர்வே அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். வடக்கு கடற்பிராந்தியங்களில் பரீட்சார்த்த முயற்சியாக முதற்கட்டமாக 10 படகுகளை வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.